கனகவதியாக மாறினார் ருக்மணி வசந்த்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ கன்னடத்தில் வெளியானது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் முன் கதையை சொல்லும் வகையில், ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பெயரில் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.

ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்குவதுடன், நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அர்விந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவையும், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பையும் கவனிக்கிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், வரமஹாலக்‌ஷ்மி திருவிழாவை முன்னிட்டு, இந்த படத்தில் ‘கனகவதி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Facebook Comments Box