தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் 8,44,650 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 149 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 482 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,27,962 பேர் குணமடைந்துள்ளனர், 12,413 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 4,275 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Facebook Comments Box