10 அணிகள் பங்கேற்பில் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி இன்று தொடக்கம்
திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது பருவம் சென்னை எழும்பூர் அருகே உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 11) ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
‘ஏ’ பிரிவில்
- வருமான வரித்துறை
- மாஸ்கோ மேஜிக்
- தியானத் வீரன்ஸ்
- ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
‘பி’ பிரிவில்
- இந்தியன் வங்கி
- ஏ.ஜி. அலுவலக அணி
- எஸ்.எம். நகர் ஹாக்கி
- பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ்
- தெற்கு ரயில்வே
ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை போட்டியிடும். லீக் சுற்றின் முடிவில், இரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணி மற்ற அணிகளுடன் ஒருமுறை போட்டியிடும்.
சூப்பர் 6 சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் ஆட்டத்தில் மோதும். அந்த போட்டியில் வெற்றியடைந்த அணி இறுதிப் போட்டியில் 2-வது அணியாக கலந்துகொள்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.
பரிசு தொகைகள்:
- முதலிடம்: ரூ.50,000
- இரண்டாம் இடம்: ரூ.30,000
- மூன்றாம் இடம்: ரூ.20,000
இந்த தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய ஹாக்கி லெஜண்ட் வி.பாஸ்கரன் மற்றும் திருவள்ளூர் ஹாக்கி சங்க தலைவர் பிரகாஷ் அய்யாதுரை அறிவித்தனர்.
அதே நேரத்தில் ஒலிம்பியன் முகமது ரியாஸ், திருமால்வளவன், தொழில்நுட்ப இயக்குநர் மொகுல் முகம்மது மூனீர், இந்திய ஹாக்கி பயிற்சியாளர் சி.ஆர்.குமார் மற்றும் இந்திய அணி வீரர்கள் மாரீஸ்வரன், சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.