சாதனை படைத்த ‘மகாவதார் நரசிம்மா’

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதன் கதையை மையமாகக் கொண்டு, அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவான அனிமேஷன் திரைப்படம் ‘மகாவதார் நரசிம்மா’. இசை – சாம் சி.எஸ். ஹோம்பாளே பிலிம்ஸ் மற்றும் கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் ஜூலை 25 அன்று வெளியானது.

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தியில் மட்டும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்தியில் ஒரு அனிமேஷன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுவே முதல்முறை. மற்ற மொழிகளின் வசூலுடன் சேர்த்து, மொத்தமாக ரூ.210 கோடிக்கு மேல் வருவாய் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box