சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ஆனார் பரத்!

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட் மற்றும் நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்து, புதிய தலைமுறை தேர்வு செய்யப்பட்டது.

ஜூலை 22-ஆம் தேதி வேட்பு மனுக்கள் தொடங்கிய இந்தத் தேர்தலில், தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள் மற்றும் 14 கமிட்டி உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுமார் 2000 உறுப்பினர்கள் கொண்ட சங்கத்தில் மொத்தம் 936 வாக்குகள் பதிவாகின.

‘பொம்மலாட்டம்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்துவரும் பரத், 491 வாக்குகளுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக ஆதித்யா மற்றும் ராஜ்காந்த் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக நடிகர் நவீந்தர் வெற்றி பெற்றார். பொருளாளராக கற்பகவள்ளி மற்றும் இணைச் செயலாளர்களாக நடிகைகள் சிவ கவிதா, நீபா, மற்றும் நடிகர்கள் ஈஸ்வர் ரகுநாத், குறிஞ்சிநாதன் ஆகியோர் தேர்வாகினர்.

Facebook Comments Box