‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு: மக்களவை ஒப்புதல்

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குவதற்கான கோரிக்கையை மக்களவை ஏற்றுக்கொண்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களையும் ஒரே காலக்கட்டத்தில் நடத்தும் நோக்கத்துடன் அரசியலமைப்பு திருத்த மசோதை (129வது திருத்தம்), மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதை 2024 ஆகிய இரு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து, பி.பி. சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு இந்த மசோதாக்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போது, இந்த மசோதாக்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யும் காலக் கட்டு, இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பி.பி. சவுத்ரி தெரிவித்தார்.

Facebook Comments Box