பள்ளிகள் இடையிலான வாலிபால்: வேலம்மாள், டான் போஸ்கோ அரையிறுதிக்கு முன்னேற்றம்
சான் அகாடமியின் சார்பில் நடத்தப்படும் 7வது சென்னை மாவட்ட பள்ளிகள் இடையிலான வாலிபால் போட்டிகள், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் சிறுவர் பிரிவு கால் இறுதியில், பெரம்பூர் டான் போஸ்கோ அணி, பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளியை 25-20, 25-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணி, ஒய்எம்சிஏ கொட்டிவாக்கத்தை 33-35, 25-10, 25-10 என்ற கணக்கில் வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி, ஆலந்தூர் மான்போர்ட்டை 28-18, 26-28, 25-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. முகப்பேர் வேலம்மாள் அணி, அம்பத்தூர் சேது பாஸ்கராவை 25-14, 25-8 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
சிறுமியர் பிரிவு அரையிறுதியில், டி.இ.எல்.சி. மெக்டலின் அணி, ஜெசி மோசஸை 25-13, 25-13 என்ற செட் கணக்கில் வென்றது. வித்யோதயா மெட்ரிக் அணி, சென்னை மேல்நிலைப் பள்ளியை 25-19, 25-22 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.