‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நட்சத்திரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், ஆமிர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பு அனிருத்தின்து.
அனிருத்தின் இசையில் அமைந்துள்ள மோனிகா… பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பூஜா ஹெக்டே இதில் நடனமாடியுள்ளார். பாடல் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலர், பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சிக்கு பாடல் இணைப்பை அனுப்பினர். மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா வழியாக பாடல் அவரிடம் சென்றடைந்தது.
பாடலைக் கேட்ட மோனிகா பெலுச்சி, அதை மிகவும் ரசித்ததாக தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த பூஜா ஹெக்டே, “மோனிகா பெலுச்சியின் பாராட்டு, எனக்குக் கிடைத்த முக்கியமான பாராட்டுகளில் ஒன்று. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரிடமிருந்து பாராட்டுப் பெறுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி,” என்று கூறினார்.