குழந்தையின் பெயரை அறிவித்த ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் மீண்டும் சர்ச்சை

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தனது குழந்தையின் பெயரை “ராஹா ரங்கராஜ்” என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை தூண்டியுள்ளது.

சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் செய்து 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களுடன் ஜாய் கிரிசில்டா அறிவித்தார். ஆனால், இதுவரை ரங்கராஜ் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனால், அவர் மீண்டும் மனைவியுடன் இணைந்துவிட்டார் என்ற ஊகங்கள் கிளம்பின.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டா மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்லும் புகைப்படங்களுடன், குழந்தையின் பெயர் அறிவிப்பு பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ஜாய் கிரிசில்டா இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்திருந்தார். தற்போதைய நிலை குறித்து ரங்கராஜ் மௌனமாக இருப்பதும், விவகாரம் மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box