மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டிற்காக நாளை (ஆகஸ்ட் 16) நடை திறக்கப்படுகிறது. நிறைபுத்தரி பூஜைக்காக கடந்த 29-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 30-ஆம் தேதி ஒருநாள் சிறப்பு வழிபாட்டுக்குப் பின் நடை மூடப்பட்டது.

இப்போது, சிம்ம மாத (ஆவணி) வழிபாட்டிற்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 17 முதல் 21 வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கேரளாவில் சிம்ம மாதமே மலையாளப் புத்தாண்டு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் 20-ஆம் தேதி (செப்டம்பர் 5) கேரளாவின் சிறப்பு வாய்ந்த ஓணம் திருவிழா கொண்டாடப்படும். இதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி மீண்டும் நடை திறந்து வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box