உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வெள்ள பாதிப்பினால் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதேபோல் உத்தரகண்ட் மாநில அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box