ஆந்திர மாநிலம் அமராவதியில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:சிக்கலான பிரச்னைஎல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகளில், இந்தியா மற்றும் சீன அதிகாரிகள், ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களை, எல்லையில் இருந்து திரும்பப் பெறுவதற்கு பேச்சுகள் நடக்கின்றன. இதுவரை, ஒன்பது கட்ட பேச்சுகள் நடந்துள்ளன.ராணுவ வீரர்கள் தொடர்பானது என்பதால், இது மிகவும் சிக்கலான பிரச்னை. எந்த பகுதியில், வீரர்கள் உள்ளனர்; எல்லையில் என்ன நடக்கிறது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிந்திருக்கவேண்டும்.
அந்த தகவல்களை சேகரிக்கும் பணிகளில், ராணுவ தளபதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடந்த பேச்சில், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்புகிறோம். இருதரப்புஎனினும், தீர்வு எட்டப்படவில்லை. தொடர்ந்து இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அந்த பேச்சு, தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Facebook Comments Box