மால்டா மாவட்டத்தில் நடந்த பேரணியில் நட்டா பேசுகையில், பிரதமர் கிஷான் திட்டத்தை, விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய விடாமல் தடுத்து மம்தா அநீதி இழைத்துவிட்டார். அவரின் ஈகோ காரணமாக, மத்திய அரசின் சலுகைகளை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், மாநிலத்தில் 70 லட்சம் விவசாயிகள், தங்களுக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய ரூ.6 ஆயிரத்தை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெறாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால், விவசாயிகள் மத்தியில் திரிணமுல் காங்கிரசுக்கு செல்வாக்கு இழந்து வருவதை உணர்ந்த, மம்தா தற்போது, நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த ஒப்பு கொண்டார். சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகள் நலனில், மோடி அரசும், பா.ஜ.,வும் உறுதிபூண்டுள்ளன.
நான் இங்கு வரும் போது, ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டு என்னை வரவேற்றனர். ஆனால், இந்த கோஷத்தை கேட்டு மம்தா ஏன் கோபப்பட்டார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Facebook Comments Box