மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள மன்கூர்ட் பகுதியிலுள்ள பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் நேற்று (பிப்.5) மாலை தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பழைய இரும்பு கிடங்கில் அதிக அளவு பிளாஸ்டிக், மரக்கட்டைகள், ஆயில் டின் போன்றவை இருந்ததால், தீ அதிக அளவு பரவி கரும்புகை சூழ்ந்தது.
அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில், 16 தீயணைப்பு வாகனங்களும், 11 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
எனினும் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், காலை வரையிலும் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீ பரவும் விகிதம் ஐந்தாம் நிலையைக் கடந்ததால், கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
Facebook Comments Box