தமிழக சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் வென்று அரியணை ஏறப்போவது எடப்பாடி பழனிசாமிதான் என்று பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ம் நாள் கூட்டத்தொடரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, மற்றும் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 3ம் நாளான இன்று சட்டப்பேரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்கியுள்ளது. 
இந்நிலையில், பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நாளைய முதலமைச்சரும், நிரந்தர முதலமைச்சரும் எடப்பாடி பழனிசாமிதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் எனவும் கூறியுள்ளார்.
Facebook Comments Box