கோவையில், பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர், மோடி முகாமை நேற்று துவக்கி வைத்தனர். வானதி சீனிவாசன் கூறுகையில், ”வரும், 21 வரை மோடி முகாம் நடக்கிறது. பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான், இந்த முகாமின் முக்கிய நோக்கம்,” என்றார்.
நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிலரது பெயரை காவல் துறையிடம் கொடுத்துள்ளோம்.அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜ.க எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்வது கிடையாது. தேர்தல் களத்தில் திட்டம் போட்டு வன்முறையை உருவாக்கி, தேர்தலை சந்திக்க, சிலர் சதித்திட்டம் போட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
Facebook Comments Box