%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581 மக்கள்சபை கூட்டத்தின் மூலம் ஸ்டாலின் தினமும் ஒரு காமெடி.... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேச்சு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழகஅரசின் 5 ஆயிரத்து 704 விலைஇல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா, திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில் மாவட்டஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் பணிகளை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஆறுமுகம், உதவி தலைமை ஆசிரியர் லதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, “திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள்சபை என்ற பெயரில் கிராமங்கள்தோறும் பேசி வருகிறார். இவரது உளறல் பேச்சினால், அதிமுகவுக்கு 2 மடங்கு ஓட்டுகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் சபை மூலம் ஸ்டாலின் இன்று என்ன காமெடி செய்யப்போகிறார் என கிராம மக்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

The post மக்கள்சபை கூட்டத்தின் மூலம் ஸ்டாலின் தினமும் ஒரு காமெடி…. அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேச்சு appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box