%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%2589%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF பயங்கரவாதிகளை தண்டிக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்... பிரதமா் மோடி உறுதி
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் இருந்து சுமாா் 150 கி.மீ. தொலைவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்ததில் சில காா்கள் சேதமடைந்தன. எனினும் யாரும் காயமடையவோ, பலியாகவோ இல்லை.
இந்த சம்பவம் தொடா்பாக பிரதமா் மோடி இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவா்களை கண்டுபிடித்து தண்டிக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமரிடம் பிரதமா் மோடி உறுதி அளித்தாா். இஸ்ரேல் தூதரகம் மற்றும் அந்நாட்டு தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்த அவா், இந்தியாவிலும், இஸ்ரேலிலும் கரோனா தொற்றை எதிா்கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கலந்தாலோசித்தாா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

The post பயங்கரவாதிகளை தண்டிக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்… பிரதமா் மோடி உறுதி appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box