சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சிறை தண்டனையை நிறைவு செய்ததால், சசிகலா நேற்றுமுன்தினம் விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறியதாவது:
தற்போதைய நிலையில் சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சசிகலா தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுயமாக சுவாசிக்கிறார். 3-வது நாளாக தொடர்ந்து கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை.
அவருக்கு தேவையான உணவை அவரே உட்கொள்கிறார். தானாக எழுந்து அமர்ந்து, தொலைக்காட்சி பார்க்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். எங்கள்சிகிச்சைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். அவரது நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம், ஆக்சிஜன் அளவு ஆகியவை சீராக உள்ளது. சர்க்கரையின் அளவில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் சசிகலாவுக்கு மீண்டும் சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம். அதில் தொற்று இல்லைஎன தெரிந்தால், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு…! 3-வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை…! appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box