தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2ம் தேதி தொடங்க உள்ளது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர். இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க இருக்கக்கூடிய அம்சங்கள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதுகுறித்த அம்சங்கள் குறித்தும் அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்தும், சசிகலா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
The post நாளை மாலை 4.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box