%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%2595%25E0%25AE%25BF%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581 அதிமுக வி.வி.செந்தில்நாதன் அக்கட்சியில் இருந்து விலகி இன்று பா.ஜ.கவில் இணைகிறார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு சமீப காலமாக சென்று வருகின்றனர். அதே போன்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த வி.வி.செந்தில்நாதன் அக்கட்சியில் இருந்து விடுப்பட்டு இன்று தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொள்கிறார்.
சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொள்கிறார். அவருடன் பா.ஜ.க. தலைவர்கள் பலர் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் முக்கிய பதவியில் வசித்து வந்த ஒருவர் தற்போது பா.ஜ.க.வுக்கு செல்வதால் கரூர் மாவட்ட அரசியல் மட்டுமின்றி தமிழக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வி.வி.செந்தில்நாதன் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக வி.வி.செந்தில்நாதன் அக்கட்சியில் இருந்து விலகி இன்று பா.ஜ.கவில் இணைகிறார் appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box