%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2586%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588 போலீசார் அதிரடி... 2 பேரை கொன்று ஒருவனை என்கவுன்டரில் சுட்டுக்கொலை...!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி, 50. இவர் தர்ம குளத்தில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று (ஜன.,27) காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணிக்கு தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார்.
அவரைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டிற்குள் புகுந்து ஆஷா அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் அவர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க், சிடி, ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சவுத்ரியின் காரில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த தன்ராஜ் சவுதரி, அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சவுத்ரியின் கார் சீர்காழி அருகே உள்ள பட்ட விலாகம் பகுதியில் போலீசார் கண்டுபிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சீர்காழி அருகே உள்ள எருக்கூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மணீஷ், மணிபால், ரமேஷ் ஆகிய மூன்று வடநாட்டு இளைஞர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொள்ளை, கொலை செயலில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரில் மணிபால் என்பவனை கொள்ளையடிக்கப்பட்ட நகையை பதுக்கி வைத்த இடத்தை அடையாளம் காண்பதற்காக மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை அழைத்து சென்றார். அப்போது டிஎஸ்பி.,யை தள்ளிவிட்டு தப்பியோட முயற்சித்த கொள்ளையனை போலீசார் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக்கொன்றனர்.

The post போலீசார் அதிரடி… 2 பேரை கொன்று ஒருவனை என்கவுன்டரில் சுட்டுக்கொலை…! appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box