மதுரையில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, 2020 நவ.,18ல், வைகை எக்ஸ்பிரஸ் சென்றது. மதுரை, திருமங்கலத்தை அடுத்த, திருப்பதி பாலாஜி நகரைச் சேர்ந்த சுரேஷ், 45, ரயிலை ஓட்டினார்.ரயில் கொடைக்கானல் ரோடு — அம்பாத்துரை இடையே சென்றபோது, நிலச்சரிவால் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.
இதைக் கவனித்த, ரயில் ஓட்டுனர் சாமார்த்தியமாக செயல்பட்டு, துரிதமாக, ‘பிரேக்’ போட்டு, ரயிலை நிறுத்தியதால், விபத்தில் இருந்து தப்பியது. பயணம் செய்த, 1,500 பேர் உயிர் தப்பினர்.ஓட்டுனரின் துரித செயல்பாட்டை பாராட்டி, அவருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது வழங்க வேண்டும் என, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, ரயில் ஓட்டுனர் சுரேஷுக்கு, நாளை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், வீரதீர செயலுக்கான அண்ணா விருதை வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்ட உள்ளார்.
The post தமிழக அரசின், வீரதீர செயலுக்கான அண்ணா விருது, வைகை எக்ஸ்பிரஸ் ஓட்டுனருக்கு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box