சேலத்தில் பிப்.6-ம் தேதி பாஜக இளைஞர் அணி மாநில மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பந்தல்கால் நடும் விழா நடந்தது. இதில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மாநாடு நடக்கிறது. மார்ச் மாதம் மாநில மாநாடு நடத்தவுள்ளோம். இந்த மாநாடு தமிழக அரசியலை புரட்டி போடும். பாஜக-வின் வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஓட்டுக்காக வேல் தூக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் என்னதான் இரட்டை வேடமிட்டாலும், அதனை மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி முறிய வாய்ப்புள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பலமாக உள்ளது.
The post ஓட்டுக்காக வேல் தூக்கும் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் நம்பமாட்டார்கள்… முருகன் விமர்சனம் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box