%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D தலைநகர் டில்லியில் விரைவில் அதிமுக அலுவலகம்...!
 தலைநகர் டில்லியில் அரசியல் கட்சிகளுக்கு அலுவலகம் கட்டுவதற்கு, மத்திய அரசு இடம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு, இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மிகப் பெரிய அலுவலகத்தை அ.தி.மு.க., கட்டி முடித்துள்ளது. இதன் முழு வேலைகளையும் தம்பிதுரை முன்னின்று பார்த்தார். சமீபத்தில், டில்லி வந்த தமிழக முதல்வர் இ.பி.எஸ்., இந்த அலுவலகத்தை பார்த்தார். தான் முதல்வர் பதவியில் இருக்கும்போதே, இந்த அலுவலகத்தை திறக்க வேண்டும் என விரும்புகிறார், இ.பி.எஸ்., இதையடுத்து, இந்த அலுவலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

The post தலைநகர் டில்லியில் விரைவில் அதிமுக அலுவலகம்…! appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box