மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் வரி சீர்திருத்தம் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
X தளத்தில் இது தொடர்பான பதிவில், தன்னைப் பொருத்தவரை சீர்திருத்தம் என்பது 140 கோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.
ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு வீட்டு உபயோகப் பொருள்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, இதனால் ஏழை, எளிய மக்களின் பணம் மிச்சமாகிறது என்றார்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளோம் என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Facebook Comments Box