முதல் நாள் டிக்கெட் முன்பதிவில் ‘லியோ’ சாதனையை எட்டாத ‘கூலி’
முதல் நாள் முன்பதிவு கணக்கில், ‘லியோ’ திரைப்படத்தை விட ‘கூலி’ படம் பின்தங்கியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பட வெளியீட்டுக்கு முன்பே, இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், டிக்கெட் முன்பதிவில் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், வெளியீட்டு நாளில் வசூல் சாதனை படைக்கும் என வர்த்தக வட்டாரங்கள் எதிர்பார்த்தன.
புக்மைஷோ வெளியிட்ட தகவலின்படி, ‘கூலி’ படத்தின் முதல் நாள் முன்பதிவு எண்ணிக்கை 7.17 லட்சம் டிக்கெட்களாகும். இது, ‘லியோ’ படத்தின் 7.51 லட்சம் டிக்கெட்டுகளை விட குறைவு. எனவே, முதல் நாள் முன்பதிவு சாதனையில் ‘லியோ’ இன்னும் முன்னிலையிலேயே உள்ளது.
எனினும், பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், ‘லியோ’ உருவாக்கிய பல சாதனைகளை ‘கூலி’ முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ள முதல் நாள் வசூல் கணக்கில், ‘லியோ’வை முந்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.