செமிகண்டக்டர் சிப் முதல் ஜெட் இன்ஜின் வரை – பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை முக்கிய அம்சங்கள்
புதிய தில்லி: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 15) 12-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். சுமார் 103 நிமிடங்கள் நீடித்த அவரது உரை, இதுவரை அவர் வழங்கிய சுதந்திர தின உரைகளில் நீண்டதாகும். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்ததாக, அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய சாதனையையும் மோடி படைத்துள்ளார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
1. முதல் இந்திய சிப் விரைவில்
- முந்தைய அரசுகள் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பில் கவனம் செலுத்தவில்லை, ஆனால் பிற நாடுகள் அதில் முன்னேறின.
- இந்தியா இப்போது அதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் வெளியிடப்படும்.
2. அணுமின் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு
- அடுத்த 20 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தியை 10 மடங்குக்கும் மேல் உயர்த்தும் நோக்கில் பணிகள் நடக்கின்றன.
- இதற்காக 10 புதிய அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
3. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
- அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தீபாவளிக்கு அறிவிக்கப்படும்.
- அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைப்பு.
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு அதிக நன்மைகள்.
- பிரத்யேக சீர்திருத்த பணிக்குழு உருவாக்கப்படும்.
4. ரூ.1 லட்சம் கோடி வேலைவாய்ப்பு திட்டம்
- புதிய வேலைவாய்ப்பு திட்டம் அறிவிப்பு.
- பணியில் இணையும் ஒவ்வொரு இளைஞருக்கும் ரூ.15,000 வழங்கப்படும்.
- 3 கோடி இளைஞர்களுக்கு பயன் தரும்.
5. மக்கள்தொகை பாதுகாப்பு நடவடிக்கைகள்
- எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் ஊடுருவல் காரணமாக மக்கள்தொகை சமநிலையில் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை.
- உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வு இயக்கம் தொடக்கம்.
6. எரிசக்தி மற்றும் கடல்சார் ஆராய்ச்சி
- பெட்ரோல், டீசல், எரிவாயு இறக்குமதி செலவை குறைப்பது முக்கிய இலக்கு.
- சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர்மின், அணுசக்தி விரிவாக்கம்.
- தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் தொடக்கம்.
7. சொந்த ஜெட் இன்ஜின் உருவாக்கம்
- கொரோனா தடுப்பூசி, யுபிஐ உருவாக்கம் போல, ஜெட் இன்ஜின் உற்பத்தி இந்தியாவிலேயே செய்ய வேண்டும்.
- விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள் இந்த சவாலைக் கையாள வேண்டும் என பிரதமர் அழைப்பு.
Facebook Comments Box