‘கூலி’க்காக சம்பளம் வாங்கினாரா? – ஆமிர் கான் விளக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான், இதில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக. 14-ல் ரிலீஸாகி ஓடி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆமிர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் பரவினாலும், நடிகர் ஆமிர்கான் இதை மறுத்துள்ளார்.

ஆமிர்கான் கூறியதாவது:

கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. நான் ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை.

Facebook Comments Box