ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் ரஷ்ய அதிபராக புடின் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல், இந்தியாவின் பிரதமராக மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார்.
இந்நிலையில், ரஷ்யாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அடுத்த மாதம் மாஸ்கோ செல்ல உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல் முறை.
Facebook Comments Box