136 ஆண்டு சாதனை முறியடிப்பு: இங்கிலாந்தின் இளம் கேப்டன் ஜேக்கப் பெத்தேல்!

அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 21 வயது ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி கடுமையான உடலுழைப்பைக் கோரிய டெஸ்ட் தொடரில் ஆடிய பிறகு, ரெகுலர் டி20 கேப்டன் ஹாரி புரூக் இந்தத் தொடரில் ஆடவில்லை என்பதால் பெத்தேல் கேப்டனாக உயர்ந்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு ஹாரி புரூக் மீண்டும் கேப்டனாக திரும்புவார்.

அயர்லாந்தில் டி20 தொடர் செப்டம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டப்ளினில் உள்ள மலாஹைடில் நடைபெறும். இங்கிலாந்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 2 முதல் 7 வரை நடைபெறும். அதற்குப் பிறகு செப்டம்பர் 10 முதல் 14 வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.

ஜேக்கப் பெத்தேல் கடந்த ஆண்டுதான் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக அறிமுகமானார். முன்பு இளம் கேப்டனாக இருந்தவர் 1889-ம் ஆண்டு மாண்ட்டி பௌடன் (23 வயது). இதன்பிறகு, ஜேக்கப் பெத்தேல் 21 வயதில் கேப்டனாகியுள்ளார். இப்போது அவர் ஜாம்பவான் ஜாஸ் பட்லர் உள்ளிட்டோரை வழிநடத்தவுள்ளார்.

ஜேக்கப் கிரகாம் பெத்தேல் அக்டோபர் 23, 2003-ம் ஆண்டு பார்படோஸில் பிறந்தார். இடது கை பேட்டிங்கும், இடது கை ஸ்பின் பவுலிங்கும் செய்யும் வீரர்.

20 வயதில் இங்கிலாந்துக்காக இரண்டாவது போட்டியிலேயே ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவை ஒரே ஓவரில் 20 ரன்கள் வித்தியாசத்தில் விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் தன் வரவை அறிவித்தார். 47 பந்துகளில் 90 ரன்கள் வைத்து அவர் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

அதன் பிறகு கரீபியன் தொடரில் 3 அரைசதங்கள் விளாசி, தன் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தினார். பெத்தேல் பிறந்த பார்படோஸ்தான் தனது ஆரம்ப கிரிக்கெட் நாட்கள். 13 வயதில் ரக்பி பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைத்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அப்போது திரும்பிப் பார்க்கவில்லை. இன்று இங்கிலாந்து அணியின் 3 வடிவ ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

Facebook Comments Box