பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளம் – 344 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக இதுவரை 344 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 307 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிற மாகாணங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மழையால் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிப்பு கண்டுள்ளது. அங்கு 74 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இதனால், பாகிஸ்தானில் மழை மற்றும் பெருவெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 344 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மீட்புப் பணிகளில் 2,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
கைபர் பக்துன்கவா மீட்பு ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் அகமது ஃபைசி தெரிவித்ததாவது:
“கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் கொண்டு செல்வதும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லுவதும் கடினமாகியுள்ளது. சாலைகள் மூடப்பட்டதால், மீட்புப் பணியாளர்கள் கால்நடையாக சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.