இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் 5% தள்ளுபடி – ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனியின் அறிவிப்பு

அமெரிக்காவின் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும் என்றும், அதில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்காக ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக, ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படுவதுடன், மொத்தமாக 50 சதவீத வரியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நிலையில், எவ்ஜெனி கிரிவா கூறியதாவது: “அமெரிக்காவின் பல்வேறு தடைகள் மற்றும் அழுத்தங்களும் இருந்தபோதிலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு தொடர்ந்து வழங்கப்படும். தள்ளுபடி விபரங்கள் வணிக ரகசியம் தான். ஆனால் பேச்சுவார்த்தை முடிவுகளின் அடிப்படையில், இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்” என்றார்.

மேலும், ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின், “இந்தியா தற்போது சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டாலும், எங்கள் உறவில் பரஸ்பர நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தாலும், இந்தியா–ரஷ்யா இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பு இடையூறு இல்லாமல் தொடரும்” எனவும் தெரிவித்தார்.

Facebook Comments Box