40 மாடி உயர ராக்கெட் உருவாக்கத்தில் இஸ்ரோ

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தும் திறன் கொண்ட 40 மாடி உயர ராக்கெட்டை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், உரையாற்றியபோது,

“டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் சுமார் 17 டன் எடையுடையது. அது 35 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது.

ஆனால் இப்போது, 75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தக்கூடிய மிகப்பெரிய ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருகிறது” என்று கூறினார்.

Facebook Comments Box