மோடியுடன் புதின் தொலைபேசி உரையாடல் – டிரம்ப் சந்திப்பு குறித்து விளக்கம்

திங்கள்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசியில் உரையாடினார். அந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த வாரம் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடைபெற்ற தனது சந்திப்பு குறித்து புதின் விரிவாக பிரதமர் மோடிக்கு தெரிவித்தார்.

உக்ரைன் மோதல் தொடர்பாக உரையாடும்போது, மோதல்களுக்கு தூதரக பேச்சுவார்த்தை வழியே அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக இருப்பதாக பிரதமர் மோடி புதினிடம் வலியுறுத்தினார். மேலும், இதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box