ஜிஎஸ்டி வரியில் 12%, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை

கடந்த சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்ற மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்கி வரி முறை எளிதாக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். கூட்டத்தில் அவர்கள் 12%, 28% வரம்புகளை நீக்க பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்கிறது. ஒப்புதல் கிடைத்தால், ஜிஎஸ்டி வரியில் இனி 5% மற்றும் 18% மட்டுமே நிலைநிறுத்தப்படும்; மற்ற வரிகள் நீக்கப்படும்.

மேலும், ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மாநிலங்களுக்கான பங்கீடு மற்றும் வருவாய் இழப்புக்கான நஷ்டஈடு தொடர்பான கேள்விகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும்.

மத்திய அரசு அறிவித்த 12%, 28% வரி நீக்கம் திட்டத்தை அனைத்து அமைச்சர்களும் ஒற்றுமையாக பரிந்துரைத்துள்ளனர். சில மாநிலங்கள் சில கருத்துகளை வெளிப்படுத்தினாலும், அவை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் பிஹார் துணை முதல்வர் மற்றும் ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சாம்ராட் சவுத்திரி தெரிவித்தார்.

Facebook Comments Box