“உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு

மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேட்சை விட்டபோதுதான் முதன்முதலாக ‘போதும், ஓய்வு பெறுவோம்’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்ததாக இந்திய அணியின் முன்னாள் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் மனம் திறந்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வினுடன் நடந்த ‘குட்டி ஸ்டோரீஸ்’ யூடியூப் ஷோவில், ராகுல் திராவிட் கூறியது:

“உங்கள் பந்தில் தான் கேட்சை விட்டேன் அஸ்வின். மேல்போர்னில் அதுவும் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கேட்சை விட்டேன். அது வாழ்க்கையில் ஒருபோதும் விடக்கூடிய கேட்ச் அல்ல. மிகவும் சுலபமான கேட்ச்.

என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல விஷயங்களை மறந்து விடுவேன், ஆனால் கேட்ச்களை விட்டது மட்டும் நினைவில் இருந்து வருகிறது. அந்தக் கணம் சரியானது என்று தெரிந்ததும், வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்று தோன்ற ஆரம்பித்தது. அந்த தொடரின் முடிவில் எனக்கு தெளிவாக புரிந்தது.

ஆனாலும் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க விரும்பவில்லை. அதே சமயம், ‘டெஸ்ட் கிரிக்கெட் இனி நமக்கு அவ்வளவுதான்’ என்று யோசித்தேன். வீட்டுக்குத் திரும்பி இதைப் பற்றி ஆற அமர்ந்து யோசிப்போம் என்று முடிவு செய்தேன். அப்போது உணர்ச்சிகரமான முடிவல்ல, முடிவுதான் என்று தெளிவடைந்தது.

இதனால் வீட்டில் 2-3 வாரங்கள் குடும்பத்துடன் செலவிட்டு, திட்டவட்டமாக முடிவெடுத்தேன்: இனி கிரிக்கெட் போதும், இனி விளையாடப் போகவில்லை.

அந்த நேரத்தில் நிறைய இளம் வீரர்கள் வந்திருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா நன்றாக வருகிறார்கள். விராட்டுக்கு அருமையான தொடராக அந்தத் தொடரே அமைந்தது. புஜாராவும் ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தார். ரஹானே அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். ஒரு 4-5 பேர் சரியாக வந்து கொண்டிருந்தனர். இவர்கள்தான் அடுத்த தலைமுறை இந்திய வீரர்கள் என தெளிவாக புரிந்தது.

என் காலம் முடிந்து விட்டது, முடிந்த வரை பங்களித்தோம். அணியை இயன்ற அளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்தேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் 0-4 தோல்வி ஏற்பட்டது, இது தாக்கம் ஏற்படுத்தியது. ஒரு சீனியர் வீரராக அணிக்குப் பங்களிக்க முடியாவிட்டால் நகர்ந்து விடவேண்டும்,” என்று ராகுல் திராவிட் கூறினார்.

திராவிட் தன் கேப்டன்சியில் கிரெக் சாப்பல் பயிற்சிகாலத்தில் தொடர்ச்சியாக 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வென்ற ஒரே அணி இந்தியா என்று உலக சாதனையை நிகழ்த்தியவர்.

2007 உலகக்கோப்பை சமயத்தில் கிரெக் சாப்பலும் திராவிட் சேர்ந்து செய்த மாற்றங்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி போன்ற சீனியர் வீரர்களுக்கு பிடித்தமல்லாதது. அதன் விளைவாக, 2007 உலகக்கோப்பையில் திராவிட் பழி வாங்கப்பட்டு இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box