‘தண்டகாரண்யம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

செப்டம்பர் 19-ஆம் தேதி ‘தண்டகாரண்யம்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘இரண்டாம் உலகப்போரின் இறுதி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தண்டகாரண்யம்’. அதன் இறுதி படப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது செப்டம்பர் 19-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதியன் ஆதிரையின் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்தையும் தயாரித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். தினேஷ் மற்றும் கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக செல்வா ஆர்.கே பணியாற்றியுள்ளனர்.

படக்குழு விரைவில் இப்படத்துக்கான விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கவிருக்கிறது. இதன் பிறகு, ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தையும், அதே இயக்குநர் இயக்கும் மற்ற படத்தையும் தயாரித்து வருகிறார் பா.ரஞ்சித்.

Facebook Comments Box