ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்த்
அக்டோபர் 2-ம் தேதி நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,
“அக்டோபர் 2-ம் தேதி காலை 7.40 மணியளவில் நாக்பூர் ரேஷிம்பாக் திடலில் விஜயதசமி விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார்.
விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சிறப்புரையாற்றுவார். மேலும், இந்த ஆண்டு விஜயதசமி விழா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழா கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெறுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Facebook Comments Box