யார் இந்த சுதர்ஷன் ரெட்டி? – இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பின்புலம்

இண்டியா கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பில், “பி. சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிக மதிப்புமிக்க மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். நீண்ட மற்றும் சிறப்பான சட்ட வாழ்க்கையை அவர் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

அவர் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான உறுதியான குரலாக இருந்து வருகிறார். ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்படும் மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பும், அரசியலமைப்பையும் அடிப்படை உரிமைகளையும் காக்கும் அவரது தீர்ப்புகளும் சிறப்பிக்கப்படுகின்றன.

இண்டியா கூட்டணி, இந்தத் தேர்தலை சித்தாந்தப் போராகக் கருதி, அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த முடிவால் பி. சுதர்ஷன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

மறுபுறம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக பணியாற்றி வரும், தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box