பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதார் அட்டை ஏற்கப்படும் – உச்ச நீதிமன்ற உத்தரவு

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்ததால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்குமுன்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் தனியாக வெளியிடப்பட்டன.

இந்நிலையில், அந்த வழக்கு மீண்டும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க மனு அளிக்கலாம் என்றும், அதற்கு ஆதார் அட்டையை சான்றாக பயன்படுத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், பெயர் சேர்ப்பதற்கான 11 ஆவணங்களுடன் ஆதாரையும் இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிஹாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் உதவாதது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. “அரசியல் கட்சிகள் தங்கள் கடமையை நிறைவேற்றவில்லை. வாக்குச்சாவடி மட்டத்திலான முகவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்களே வாக்காளர்களுக்கு உதவி செய்ய வேண்டியவர்கள்” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

Facebook Comments Box