மீண்டும் கைகோர்க்கும் சிரஞ்சீவி – பாபி கூட்டணி!

இயக்குனர் பாபி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி.

பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த டாக்கு மஹாராஜா படம் வெளியானது. அதன் பின்னர் கே.வி.என் தயாரிக்கும் புதிய படத்திற்கான இயக்குநராக பாபி தேர்வாகியுள்ளார். தற்போது அந்தக் கதையில் சிரஞ்சீவி நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

முன்பாக சிரஞ்சீவி – பாபி இணைந்து வால்டர் வீரய்யா என்ற படத்தில் பணிபுரிந்தனர். அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் கைகோர்க்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறது.

தற்போது விஸ்வம்பரா மற்றும் மனா சங்கரவாரா பிரசாத் காரு படங்களில் கவனம் செலுத்தி வரும் சிரஞ்சீவி, அவற்றுக்குப் பிறகு பாபி இயக்கும் இந்த புதிய படத்திற்கும் தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

Facebook Comments Box