ரஜினியின் ‘தர்பார்’ தோல்வி காரணம் – ஏ.ஆர். முருகதாஸ் வெளிப்படையான பேட்டி
ரஜினியின் ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததற்கான காரணங்களை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெளிவாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம், ரஜினி நடித்திருந்தாலும், எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை. இப்படம் குறித்துப் பேட்டியளித்த அவர், தோல்விக்கான காரணங்களை விளக்கினார்.
அவர் கூறியதாவது:
*“‘தர்பார்’ படத்தை இன்னும் மிகப்பெரிய அளவில், நுட்பமாக இயக்கியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தக் கதையில் நிறைய பயணக் காட்சிகள் இருந்தன; அவற்றை வேண்டாம் என்று குறைத்து எடுத்தேன். ரஜினி சாரை வைத்து இயல்பான சூழலில் படம் எடுக்க வேண்டாமென நினைத்துவிட்டேன்.
அந்தக் கதை அப்பா–மகள் உறவை மையமாகக் கொண்டது. ஆனால் நயன்தாரா கதையில் வந்ததும், அதன் போக்கு மாறிவிட்டது. மும்பை பின்புலத்தையும், நடிகர் தேர்வுகளையும் மாற்றியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என எனக்குத் தோன்றுகிறது.
குறுகிய காலத்திலேயே அதிக உற்சாகத்தில் இயக்கிய படம் அது. மேலும் கதையையே மிக வேகமாக எழுதியது, தோல்விக்கான காரணங்களில் ஒன்று ஆகும்”* என்று ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.