திருப்பதியில் ஜூலை மாதத்தில் 1.24 கோடி லட்டு விற்பனை – புதிய சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதத்தில் லட்டு விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அந்த மாதத்தில் மொத்தம் 1,25,10,300 லட்டுகள் தயாரிக்கப்பட்டதில், 1,24,40,082 லட்டு பிரசாதங்கள் பக்தர்களிடம் விற்பனையானது.

இதற்கு முன், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1,04,57,550 லட்டுகள் விற்பனையாகியிருந்தன. மேலும், இந்த ஆண்டின் ஜூலை 12-ஆம் தேதியன்று மட்டும் 4,86,134 லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

கடந்த ஆண்டு அதே தேதியில் 3.24 லட்சம் லட்டுகள் மட்டுமே விற்பனையானது. இந்த ஒரு நாளிலேயே தேவஸ்தானத்திற்கு லட்டு விற்பனை மூலம் ரூ.2.43 கோடி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box