‘மதராஸி’ ட்ரெய்லர் விமர்சனம் – முருகதாஸின் அடுத்த ‘கஜினி’யா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். இன்று வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடையே ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

ட்ரெய்லர் சிறப்புகள்:

முந்தைய படமான ‘தர்பார்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஹிந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதன் பின்னர், தமிழில் மீண்டும் பெரிய முயற்சியாக ‘மதராஸி’யை எடுத்திருக்கிறார் முருகதாஸ்.

காதல், ஆக்ஷன், கதாநாயகனின் உளவியல் சிக்கல்கள் ஆகியவை இணைந்து வரும் விதம், ‘கஜினி’ படத்தின் பாணியை நினைவூட்டுகிறது. கேவின் குமாரின் ஆக்ஷன் காட்சிகள் ட்ரெய்லரிலேயே பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

வித்யூத் பேசும் “துப்பாக்கி யாருடைய கையிலிருந்தாலும், வில்லன் நான்தான்” என்ற வசனம் சிறப்பாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், விறுவிறுப்பாக எடிட் செய்யப்பட்ட ட்ரெய்லர், படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. ஆனால், இது உண்மையில் ‘கஜினி’ போலவே முருகதாஸுக்கு மீண்டும் பெரிய ஹிட்டைக் கொடுக்கும் படமாகுமா என்பதை தெரிந்துகொள்ள செப்டம்பர் 5 வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

Facebook Comments Box