இன்ஸ்டாகிராமில் மைல்கல்லை எட்டிய விஜய்யின் செல்ஃபி வீடியோ

விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ பதிவும் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகமெங்கும் இருந்து சுமார் 10–15 லட்சம் பேர் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பல்வேறு நபர்கள் மாநாட்டு திடலிலிருந்து, மாநாட்டுக்கு முன்பும் பின்பும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். இதனால் மாநாட்டிற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

மாநாட்டு திடலுக்கு விஜய் வந்தவுடன் அங்கிருந்த நடைபாதையில் நடந்து தொண்டர்களுக்கு கையசைத்தார். அப்போது தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதனை 22-ம் தேதி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் பதிவு மாபெரும் சாதனையை எட்டியுள்ளதாகும்.

விஜய்யின் செல்ஃபி வீடியோ இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் 10 மில்லியன் லைக்குகளும் பெற்றுள்ளது. இந்தியாவில் அரசியல் சார்ந்த பதிவொன்றுக்கு இவ்வளவு பார்வைகள், லைக்குகள் பெற்றிருப்பது விஜய்யின் பதிவுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் பதிவுக்கு இதுவரை இத்தனை வரவேற்பு கிடைத்ததும் விஜய்யின் பதிவுக்கு தான் என்று நினைவுகூரலாம்.

Facebook Comments Box