டி20 எஸ்.ஏ.20 தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்
ஐபிஎல் மாதிரி நடத்தப்படும் எஸ்.ஏ.20 கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில், கிரஹாம் ஃபோர்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாததால், தற்போது அவர் நீக்கப்பட்டு புதிய தலைமைப் பொறுப்பில் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக், அணியின் துணை பயிற்சியாளராக இணைக்கப்பட்டுள்ளார்.