அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்துப் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது: *“உலகின் பல்வேறு இடங்களில் வெடிக்கத் தயாராக இருந்த போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகப் பெரிய போர் வெடித்திருக்கலாம். ஆனால் அதை நான் தடுத்தேன். மொத்தம் 7 போர்களை நிறுத்தியுள்ளேன், அதில் இந்தியா–பாகிஸ்தான் போரும் அடங்கும்.
இரு நாடுகளும் ஆயுதப் போராக மாறும் நிலையில் இருந்தபோது, ‘நீங்கள் எங்களுடன் வாணிக உறவைப் பேண விரும்புகிறீர்களா அல்லது சண்டையிட விரும்புகிறீர்களா? சண்டை தொடர்ந்தால், வர்த்தக உறவை நிறுத்திவிடுவோம்’ என்று எச்சரித்தோம். வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பை அழுத்தமாகக் கொண்டு, அவர்கள் போரிலிருந்து விலகினர்.
நான் நிறுத்திய 7 போர்களில் 4 போர்கள் வர்த்தக மற்றும் வரி அச்சத்தால் முடிவுக்கு வந்தவை. இதன் மூலம் அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களை வருவாயாக பெற்றது,”* என்று ட்ரம்ப் தெரிவித்தார்.