இயக்குநர் பட்டம் ஏற்ற ரவி மோகன்!

யோகிபாபு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் நடிகர் ரவி மோகன்.

சமீபத்தில் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். அதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவ்விழாவில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை ரவி மோகன் அறிவித்தார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தை அவர் தயாரிக்கவிருக்கிறார். அதற்கு ‘ப்ரோகோட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், யோகிபாபுவை மையமாக வைத்து, தானே இயக்கும் படத்தையும் அவர் அறிவித்தார். இதன் மூலம் முதன்முறையாக இயக்குநராக களம் இறங்குகிறார் ரவி மோகன்.

இந்த இரண்டு படங்களுக்கும் நடிகர் சிவராஜ்குமார் மற்றும் நடிகை ஜெனிலியா கிளாப்புடன் தொடக்க விழா நடத்தினர்.

Facebook Comments Box