அமெரிக்காவின் கூடுதல் வரி சுதந்திர வர்த்தகத்திற்கு தடையாகும்: ஜெர்மனி துணைத் தூதர்
இந்திய-ஜெர்மனி சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்திய கருத்தரங்கம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் என்ஸ்வீலர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“மாறிவரும் சர்வதேச புவிசார் சூழ்நிலையில், இந்தியா மற்றும் ஜெர்மனி தங்களது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. தற்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது மிக முக்கியமான ஒன்று. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த ஒப்பந்தம் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. அது வர்த்தகம், பசுமை எரிசக்தி மற்றும் முதலீட்டு துறைகளில் அதிக நன்மைகளை அளிக்கும்.
ஆனால், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா போன்ற எந்த நாடும் பிற நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தால் அது சுதந்திரமான வர்த்தகத்திற்கு தடையாக மாறும். எனவே, உலகளாவிய வர்த்தகத்தை சீராகச் செய்ய குறைந்த அளவிலேயே வரி விதிக்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.